×

சென்னையை அடுத்து பேக்கரி ஒன்றில் உரிமையாளரை ரூ.1000 கேட்டு மிரட்டிய ரவுடி கும்பல்.. இணையத்தில் வெளியான காட்சியால் இருவர் சிக்கினர்..!!

சென்னை: சென்னையை அடுத்துள்ள சுங்கவார் சத்திரம் அருகே பேக்கரி உரிமையாளரை கத்தியை காட்டி மாமூல் வசூலித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கவார் சத்திரம் அடுத்த மாரியமங்கலம் பகுதியில் உள்ள பேக்கரியில் கடந்த வியாழன் அன்று கஞ்சா போதையில் 3 ரவுடிகள் அட்டகாசம் செய்தனர். சுங்கவார் சத்திரத்தில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு வந்த 3 பேர் கடையில் இருந்த பெண் உரிமையாளரிடம் ரூ.1000 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பதிலுக்கு அவர் ரூ.200 கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் ரூ.1000 கேட்டால் ரூ.200 தருகிறாய என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். பின்னர், கையில் கத்தியுடன் அராஜகம் செய்த அந்த கும்பல் உரிமையாளரை மிரட்டி ரூ.1000 பணம் பெற்று சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சுங்கவார் சத்திரம் போலீசார் நரசிங்கப்புரத்தை சேர்ந்த பாபா என்ற வினோத் குமார் மற்றும் அபிமன்யூ ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு ரவுடி முகேந்தர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post சென்னையை அடுத்து பேக்கரி ஒன்றில் உரிமையாளரை ரூ.1000 கேட்டு மிரட்டிய ரவுடி கும்பல்.. இணையத்தில் வெளியான காட்சியால் இருவர் சிக்கினர்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sungawar Chatram ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...